தூத்துக்குடி அருகே வியாபாரிக்கு அரிவாள் வெட்டு


தூத்துக்குடி அருகே  வியாபாரிக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 30 Jun 2021 10:00 PM IST (Updated: 30 Jun 2021 10:00 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே வியாபாரியை அரிவாளால் வெட்டியவரை போலீசார் தேடிவருகிறார்கள்.

ஸ்பிக்நகர்:
தூத்துக்குடி அருகே வியாபாரியை அரிவாளால் வெட்டியவரை போலீசார் தேடிவருகிறார்கள்.

வியாபாரி

தூத்துக்குடி அருகே உள்ள அத்திமரப்பட்டியைச் சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 44). இவர் சாலையோரம் தேங்காய் மற்றும் பழம் வியாபாரம் செய்து வருகிறார். இவர் வியாபாரம் முடித்தபின்பு மீதி பொருட்களை அதே ஊரைச் சேர்ந்த ஆத்திப்பழம் என்பவரது வீட்டில் வைப்பது வழக்கம். 
ஆனால் வேல்முருகன் மீதிபொருட்கள் வைப்பது ஆத்திப்பழம் மகன் திருமணிக்கு பிடிக்கவில்லை.

இதனால் அவர், வேல்முருகனை சத்தம் போட்டார். இதை பார்த்த ஆத்திப்பழம் தனது மகனை கண்டித்துள்ளார். 

அரிவாள் வெட்டு

இந்த நிலையில் நேற்று முன்தினம் வேல்முருகன் வழக்கம்போல் வியாபாரம் முடித்து விட்டு மீதி பொருட்களை திருமணி வீட்டில் வைத்தார். அப்போதும் அங்கிருந்த திருமணி, வேல்முருகனிடம் மீண்டும் சத்தம் போட்டுள்ளார். பின்னர் அவர் அங்கு இருந்து சென்றுவிட்டார்.

இந்த நிலையில் வேல்முருகன் தனது வீட்டின் அருகில் தூங்கிக் கொண்டு இருந்தார். அப்போது, அங்கு வந்த திருமணி, வேல்முருகனை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் சத்தம் போட்டதால், அவர் அங்கு இருந்து தப்பிச் சென்றுவிட்டார். 
இதையடுத்து அங்கு இருந்தவர்கள் வேல்முருகனை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்த புகாரின் பேரில் முத்தையார்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேட்டைநாதன் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் விசாரணை நடத்தி, தப்பி ஓடிய திருமணியை வலைவீசி தேடிவருகிறார்.

Next Story