அணைக்கட்டு அருகே கோஷ்டி மோதலில் காயமடைந்தவர் சாவு


அணைக்கட்டு அருகே கோஷ்டி மோதலில் காயமடைந்தவர் சாவு
x
தினத்தந்தி 30 Jun 2021 10:24 PM IST (Updated: 30 Jun 2021 10:24 PM IST)
t-max-icont-min-icon

அணைக்கட்டு அருகே நடந்த கோஷ்டி மோதலில் காயமடைந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

அணைக்கட்டு

கோஷ்டி மோதல்

அணைக்கட்டு அடுத்த பெரியகங்கநல்லூர் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராணி. இவரது மகன் மகி. ராணுவத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அருணாதேவி (வயது 29). ராணி அம்மாள் கண்காணிப்பில் அருணாதேவி இருந்து வருகிறார். 

இந்த நிலையில் அதேப் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (38) என்பவர் அந்த வழியாகச் செல்லும்போது அருணாதேவியை கிண்டல் செய்து வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து கடந்த 16-ந் தேதி ராணி அம்மாள் மற்றும் அவரது மகன் சசிகுமார், அவரது நண்பர்கள், கார்த்திக்கை தட்டிக் கேட்டுள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு அடிதடியாக மாறியது. இதில் இரு தரப்பினரும் படுகாயமடைந்தனர்.

சிகிச்சை பலனின்றி சாவு

இதுகுறித்து இரு தரப்பினரும் அணைக்கட்டு போலீசில் கொடுத்த புகாரின் பேரில் கார்த்திக், சசி குமார் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கார்த்திக் தரப்பில் கொடுத்த புகாரின் பேரில் பாபு, அபிலேஷ் ஹரிதாஸ், சம்பூர்ணம், வேலு ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். 

இந்த நிலையில் கோஷ்டி மோதலில் காயமடைந்து சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேலு (வயது 50) சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். அதைத்தொடர்ந்து அடிதடி வழக்கை, போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்தப் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story