ஆறுகளில் தண்ணீர் வரத்து குறைந்தது
ஆறுகளில் தண்ணீர் வரத்து குறைந்தது.
கூடலூர்,
கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழை பெய்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யவில்லை. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சில நாட்கள் மட்டும் தொடர்ந்து மழை பெய்தது. ஆனால் அது போதிய அளவு இல்லை.
இதனால் பாண்டியாறு, மாயாறு உள்பட அனைத்து நீர் நிலைகளிலும் தண்ணீர் வரத்து குறைந்து விட்டது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் மே மாத இறுதியில் தொடங்கி விடும். ஆனால் இந்த ஆண்டு இதுவரை சரிவர பெய்யவில்லை. இதனால் மழை சரியாக பெய்யாமல் பொய்த்து விடுமோ? என்ற கவலை ஏற்பட்டு உள்ளது என்றனர்.
Related Tags :
Next Story