பொன்னூர் கிராமத்தில் பழங்கால சிலை கண்டெடுப்பு


பொன்னூர் கிராமத்தில் பழங்கால சிலை கண்டெடுப்பு
x
தினத்தந்தி 30 Jun 2021 10:42 PM IST (Updated: 30 Jun 2021 10:42 PM IST)
t-max-icont-min-icon

பொன்னூர் கிராமத்தில் பழங்கால சிலை கண்டெடுப்பு

வந்தவாசி

வந்தவாசியை அடுத்த பொன்னூரில் சாந்தநாயகி சமேத திருக்காமேசுவரர் கோவில் உள்ளது. இக்கோவில் 1600 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். கோவிலுக்கு சொந்தமாக அப்போதிருந்த இடங்களில் ஆங்காங்கே சிவலிங்க சிலைகள் உள்ளதாகவும், காலப்போக்கில் அந்தச் சிலைகள் கண்டெடுக்க முடியாமல் போனதாகவும் பக்தர்களும், பொதுமக்களும் கூறினர். கிராமத்தைச் சுற்றி 4 சிலைகள் ஏற்கனவே கண்டெடுக்கப்பட்டு, அந்தந்த இடங்களிலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள்.

கோவிலின் மேற்கு பகுதியில் அரசு சார்பில் நெற்களம் அமைப்பதற்காக அஸ்திவாரம் தோண்டும் பணி நடந்தபோது, பூமிக்கடியில் இருந்து 4 அடி உயரமுள்ள கல்லால் உருவாக்கப்பட்ட சிவலிங்க சிலை கண்டெடுக்கப்பட்டது. அந்தச் சிலையை பக்தா்களும், பொதுமக்களும் வழிபட்டு வருகின்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் வந்தவாசி தாசில்தார் திருநாவுக்கரசு நேரில் சென்று சிவலிங்கத்தை பார்வையிட்டார். ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி செல்வம், ஒன்றிய கவுன்சிலர் கெம்புராஜ் சின்னதுரை, கோபிநாத் ஆகியோர் உடனிருந்தனர். இதையடுத்து அந்த சிவலிங்க சிலை, திருக்காமேசுவரர் கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. 

Next Story