வால்பாறை எஸ்டேட் பகுதியில் சாலையில் உலா வரும் காட்டு யானை


வால்பாறை எஸ்டேட் பகுதியில் சாலையில் உலா வரும் காட்டு யானை
x
தினத்தந்தி 30 Jun 2021 10:45 PM IST (Updated: 30 Jun 2021 10:45 PM IST)
t-max-icont-min-icon

வால்பாறை எஸ்டேட் பகுதியில் காட்டு யானை சாலையில் உலா வந்தது.

வால்பாறை

வால்பாறை எஸ்டேட் பகுதியில்  கடந்த சில நாட்களாக காட்டு யானை ஒன்று சுற்றித்திரிந்து வருகிறது. அதிகாலை நேரத்தில் வால்பாறை நகர் பகுதியில் நடைபயிற்சி சென்றவர்கள் சாலையில் உலா வந்த காட்டு யானையை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 

நடுமலை எஸ்டேட் பகுதியில் உள்ள சிறு வனச்சோலைக்குள் முகாமிட்டிருந்த காட்டு யானை நேற்று அங்கிருந்து சிறுகுன்றா எஸ்டேட் மேல் பிரிவு வழியாக சோலையார் எஸ்டேட் வனப்பகுதிக்குள் சென்றது. 

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், வால்பாறையில் கடந்த சில நாட்களாக காட்டு யானை ஒன்று உலா வருகிறது. இதனால் தேயிலை தோட்டத்திற்கு வேலைக்கு செல்பவர்கள், நடைபயிற்சி செல்பவர்கள் பீதியடைந்து உள்ளனர். எனவே வனத்துறையினர் காட்டு யானையின் நடமாட்டத்தை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Next Story