கிணத்துக்கடவு அருகே தென்னை நார்தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
கிணத்துக்கடவு அருகே தென்னை நார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் மதிப்பில்லான பொருட்கள் எரிந்து நாசமாயின.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே தென்னை நார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் மதிப்பில்லான பொருட்கள் எரிந்து நாசமாயின.
நார் தொழிற்சாலை
கோவை மாவட்டம் கிணத்துக்கடவை அடுத்துள்ள சொக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட முத்துக்கவுண்டனூரை சேர்ந்தவர் கதிர்வேல் என்ற ராசு (வயது 50). இவர் அதே ஊரில் 5 ஏக்கர் பரப்பளவில் தென்னை நார் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்த தொழிற்சாலையில் நேற்று தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மதியம் 1.30 மணியளவில் தென்னை நார் தொழிற்சாலையின் ஒரு பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென தென்னை நார் தொழிற்சாலை முழுவதும் பரவியது. மேலும் இந்த தீ தென்னை நார் பிரித்தெடுக்கும் எந்திரத்திலும் பிடித்தது.
பயங்கர தீ விபத்து
இந்த பயங்கர தீ விபத்தால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதற்கிடையில், அந்த பகுதியில் பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தீ விபத்து குறித்து தொழிலாளர்கள், உரிமையாளருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் கிணத்துக்கடவு போலீசார் மற்றும் கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, கோவை ஆகிய தீயணைப்பு படையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு 3 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தென்னை நாரில் எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் தீயை அணைக்கும் பணிக்காக பல்வேறு இடங்களில் இருந்து 10 லாரிகளில் தண்ணீர் கொண்டு வந்தனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ரூ.பல லட்சம் பொருட்கள் நாசம்
தென்னை நார்தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் தொழிற்சாலையில் இருந்த எந்திரம் உள்பட பல லட்சம் மதிப்பில்லான பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.
இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story