தடுப்பூசி வராததால் பொதுமக்கள் ஏமாற்றம்


தடுப்பூசி வராததால் பொதுமக்கள் ஏமாற்றம்
x
தினத்தந்தி 30 Jun 2021 10:53 PM IST (Updated: 30 Jun 2021 10:54 PM IST)
t-max-icont-min-icon

தடுப்பூசி வராததால் பொதுமக்கள் ஏமாற்றம்.

பந்தலூர்,

பந்தலூர் அருகே அய்யன்கொல்லியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு நேற்று கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி அதிகாலை முதலே அய்யன்கொல்லி மட்டுமின்றி தட்டாம்பாறை, குழிக்கடவு, அத்திசால், மானூர், மழவன்சேரம்பாடி, காவயல் போன்ற சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் குவிய தொடங்கினர். 

அவர்கள் மதியம் 2 மணி வரை நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஆனால் தடுப்பூசி வரவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, கூலி வேலைக்கு செல்வதை தவிர்த்து தடுப்பூசி போட வந்தோம். ஆனால் தடுப்பூசி வராததால், ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறோம். எனவே தட்டுப்பாடு இன்றி தடுப்பூசி செலுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Next Story