திருப்பத்தூரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்


திருப்பத்தூரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 Jun 2021 11:11 PM IST (Updated: 30 Jun 2021 11:11 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூர்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் மினி லாரியை கயிறு கட்டி மெயின் ரோட்டில் இழுத்துச் சென்று புதிய பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். , 

ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்தும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாக குறைக்க வேண்டும், வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும், கொரோனா வைரஸ் காரணமாக வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு ரூ.7,500 உடனடியாக வழங்க கோரியும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் எம். சுந்தரேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் ஆனந்தன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் ஜாபர் சாதிக் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

Next Story