ஓசூரில் மூதாட்டியை ஏமாற்றி 9 பவுன் நகை அபேஸ் 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
ஓசூரில் மூதாட்டியை ஏமாற்றி 9 பவுன் நகையை அபேஸ் செய்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஓசூர்:
நடந்து சென்ற பெண்
ஓசூர் பாகலூர் சாலை ரெயின்போ கார்டன் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் உஷா (வயது 62). இவர் பாகலூர் சாலையில் நடந்து சென்றபோது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் உஷா அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி, இந்த பகுதியில் திருடர்கள் அதிகமாக உள்ளனர். நகைகளை அணிந்து செல்லாதீர்கள். நகைகளை பத்திரமாக பையில் வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.
மேலும் உஷா அணிந்திருந்த 9 பவுன் தங்க நகையை பேப்பர் ஒன்றில் வைத்து பொட்டலம் போட்டு கொடுப்பதாக கூறினார்கள். அதை நம்பி உஷாவும் நகையை கழற்றி கொடுத்தார். பின்னர் அவர்கள் கொடுத்த பேப்பர் பொட்டலத்தை வாங்கி கொண்டு தனது வீட்டிற்கு சென்றார்.
2 பேருக்கு வலைவீச்சு
வீட்டிற்கு சென்று பைக்குள் இருந்த பொட்டலத்தை பிரித்து பார்த்த போது, அதில் நகைகள் எதுவும் இல்லை. இதன் பிறகு தான் அந்த நபர்கள் நகையை அபேஸ் செய்து சென்றதை அறிந்து உஷா அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் ஓசூர் அட்கோ போலீஸ் நிலையத்தில் புகார் செய்ததன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story