வாலாஜாவில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சான்றிதழ்
வாலாஜாவில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சான்றிதழ்
வாலாஜா
வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சமூக நலத்துறை சார்பில் வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மருத்துவ கண்காணிப்பாளர் உஷா நந்தினி தலைமையில் மனநல மருத்துவர்கள் சிவாஜிராவ், ரம்யா சதீஷ்குமார் ஆகியோர் இணைந்து வெவ்வேறு நாட்களில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மனநல பரிசோதனைகள் செய்து சான்றிதள் வழங்கினர்.
சான்றிதழ் பெற்ற நபர்கள் சமூக நலத்துறை மூலம் அடையாள அட்டை பெற்று குடிசை தொழில் செய்வதற்கான சிறப்பு மானியம், குடும்ப அட்டை, படிப்புக்கான ஊக்கத்தொகை போன்றவைகளை பெற்று பயனடையலாம் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story