போக்குவரத்து விதிகளை மீறிய 73 பேர் மீது வழக்கு


போக்குவரத்து விதிகளை மீறிய 73 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 30 Jun 2021 11:38 PM IST (Updated: 30 Jun 2021 11:38 PM IST)
t-max-icont-min-icon

போக்குவரத்து விதிகளை மீறிய 73 பேர் மீது வழக்கு

சிப்காட்

ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சீக்கராஜபுரம் சோதனை சாவடி, சிப்காட் பஸ் நிறுத்தம் மற்றும் பள்ளேரி ஆகிய  பகுதிகளில் சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிதம்பரம் தலைமையிலான போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஹெல்மெட் அணியாமலும், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது, வாகனங்களை இன்சூரன்சு செய்யாதது என்பது உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை மீறிய 73 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் முக கவசம் அணியாமல் வந்த 7 பேருக்கு தலா ரூ.00 அபராதம் விதிக்கப்பட்டது.

Next Story