கொரோனா தடுப்பூசி போடாத வார்டுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று அவினாசி ஒன்றிய குழு கூட்டத்தில் கவுன்சிலர் வலியுறுத்தினார்.


கொரோனா தடுப்பூசி போடாத வார்டுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று அவினாசி ஒன்றிய குழு கூட்டத்தில் கவுன்சிலர் வலியுறுத்தினார்.
x
தினத்தந்தி 1 July 2021 12:26 AM IST (Updated: 1 July 2021 12:26 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பூசி போடாத வார்டுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று அவினாசி ஒன்றிய குழு கூட்டத்தில் கவுன்சிலர் வலியுறுத்தினார்.

அவினாசி:-
கொரோனா தடுப்பூசி போடாத வார்டுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று அவினாசி ஒன்றிய குழு கூட்டத்தில் கவுன்சிலர் வலியுறுத்தினார்.
ஒன்றிய குழு கூட்டம்
அவினாசி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் ஜெகதீசன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் பிரசாந்குமார், ஆணையாளர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒன்றில் கவுன்சிலர்கள், அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். மன்றபொருள் படிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து கவுன்சிலர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியதாவது:-
கார்த்திகேயன் 10-வது வார்டு:- கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சளி மாதிரி எடுத்தல், தடுப்பூசி போடுதல் போன்ற தகவல்களை ஒன்றிய கவுன்சிலர்களுக்கு தெரிவிப்பதில்லை. இதனால் பொதுமக்களுக்கு நாங்கள் பதில் சொல்ல முடிவதில்லை. பழங்கரை ஊராட்சியில் ஒரு நபருக்கு கூட தடுப்பூசி போடாத வார்டுகள் உள்ளது. எனவே கவுன்சிலர்களுக்கு தகவல்களை முன்கூட்டியே தவறாமல் தெரிவிப்பதுடன் அடுத்த முறை தடுப்பூசி போடும்போது தடுப்பூசி போடாத பழங்கரை ஊராட்சி பகுதிக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட வீட்டுமனை வரன்முறைகளுக்கு என்ன கட்டணம் என்பதை தெரியப்படுத்த வேண்டும். 
முத்துசாமி 19-வது வார்டு:- ஊராட்சி பகுதியில் சுகாதாரத்துறையினர் பணிகள் மேற்கொள்ளும்போது, பெண் தலைவர்கள் உள்ள ஊராட்சிகளில் அவர்களது கணவர்களுக்கு மட்டுமே தகவல் தருகின்றனர். ஒன்றிய கவுன்சிலர்களுக்கு எந்தவித தகவலும் தருவதில்லை. 2018-ம் ஆண்டு ஊராட்சிகளில் வரன்முறைபடுத்துவது (வீட்டுமனை) குறித்து முகாம் நடந்தது. அதற்கு வரன்முறை கட்டணமாக வசூலித்த தொகையை ஊராட்சிகளுக்கு இதுவரை பிரித்து தரவில்லை. அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தச்சாங்காடு அழகர் அப்புச்சி கோவில் வழியாக திருப்பூர் சாலையை இணைக்க ஒரு ரோடு போடவேண்டும்.
குடிநீர் கிடைக்க நடவடிக்கை
அய்யாவு 8-வது வார்டு:- வடுகபாளையம் ஊராட்சி ஆதிதிராவிடர் காலனியில் மழைநீர் கால்வாய்  அமைக்க வேண்டும். துலுக்க முத்தூர் ஊராட்சி பகுதிக்கு கூடுதல் கொரோனா தடுப்பூசி மருந்து வழங்க வேண்டும். 
இங்கு தாழ்வாக தொங்கும் மின்வயர்களை மாற்றுவதுடன் பழுதான மின்கம்பங்களையும் மாற்ற வேண்டும். துலுக்க முத்தூர் ஊராட்சி பட்டம்பாளையம், சாலையப்பாளையம், காட்டு வளவு, கள்ளிமடை குட்டை ஆகிய பகுதிகளில் 4 ஆண்டுகளாக குடிநீர் இன்றி பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். குடிநீர் கிடைக்க துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சத்யபாமா 15-வது வார்டு:- மருதூரில்  பணிகள் நடைபெற ரூ .1 லட்சத்து  52 ஆயிரத்திற்கு ரசீது போட்டதுடன் சரி பணிகள் ஏதும் நடைபெறவில்லை. காளிபாளையத்தில் பேவர்பிளாக் கற்கள் அமைக்க கோரிக்கை வைத்து பல மாதங்களாகியும் வேலை நடைபெவில்லை. எனவே பொதுமக்கள் நலன்கருதி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இவ்வாறு கவுன்சிலர்கள் பேசினர். கவுன்சிலர்களது அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்று தலைவர் ஜெகதீசன் தெரிவித்தார்.

Next Story