காதர்பேட்டையில் ஆடை விற்பனை கடைகளில் அதிகாரிகள் நேற்று ஆய்வு
காதர்பேட்டையில் ஆடை விற்பனை கடைகளில் அதிகாரிகள் நேற்று ஆய்வு
திருப்பூர்:
காதர்பேட்டையில் ஆடை விற்பனை கடைகளில் அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
ஆடை விற்பனை கடைகளுக்கு...
கொரோனா பாதிப்பின் காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளை தமிழக அரசு வழங்கியுள்ளது. அதன்படி திருப்பூரில் பனியன் ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் அதற்கு இடுபொருட்கள் வழங்கும் நிறுவனங்கள் 100 சதவீத தொழிலாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனால் திருப்பூரில் ஆடை தயாரிப்பு தற்போது வேகமெடுத்துள்ளது. தொழிலாளர்களும் உற்சாகமாக ஆடை தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். வெளிநாட்டு ஆர்டர்களையும் வாங்கி வருகிறார்கள்.
இந்நிலையில் ஆடை விற்பனை கடைகள் இயங்குவதற்கு திருப்பூரில் அனுமதி வழங்கவில்லை.
அதிகாரிகள் ஆய்வு
இதற்கிடையே திருப்பூரில் ஆடை விற்பனைக்கு பெயர் பெற்றது காதர்பேட்டை. இங்கு ஆயிரக்கணக்கான சில்லரை மற்றும் மொத்த ஆடை விற்பனை கடைகள் உள்ளன. இந்த கடைகளில் ஆடை விற்பனையும் மும்முரமாக எப்போதும் நடந்து வரும். வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் அதிகளவில் காதர்பேட்டைக்கு ஆடைகளை வந்து வாங்கி செல்வார்கள். இதுபோல் ஆர்டர்களும் கொடுத்து செல்வது வழக்கம். ஆடை விற்பனை கடைகளுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில் காதர்பேட்டையில் ஆடை விற்பனை கடைகள் இயங்குவதாக அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது. அதன்படி நேற்று மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் காதர்பேட்டையில் ஆடை விற்பனை கடைகள் செயல்படுகிறதா? என ஆய்வு செய்தனர்.
அப்போது அந்த பகுதியில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோல் ஆடை விற்பனையில் ஈடுபட்ட கடைகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story