காய்கறி வியாபாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி


காய்கறி வியாபாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 1 July 2021 12:32 AM IST (Updated: 1 July 2021 12:32 AM IST)
t-max-icont-min-icon

காய்கறி வியாபாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி

திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதியில் இருந்தே தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்த பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
 இந்நிலையில் திருப்பூர் மாநகராட்சி சார்பில் தென்னம்பாளையம் சந்தையில் காய்கறி விற்பனை செய்கிற வியாபாரிகளுக்கு தடுப்பூசி போடும் பணி நேற்று சந்தையின் முன்புறம் நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டனர்.

Next Story