காங்கேயம் அருகே மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்கள் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

காங்கேயம் அருகே மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்கள் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
x
தினத்தந்தி 1 July 2021 12:46 AM IST (Updated: 1 July 2021 12:46 AM IST)
t-max-icont-min-icon

காங்கேயம் அருகே மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்கள் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

காங்கேயம்:
காங்கேயம் அருகே மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்கள் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர். 
வாகன சோதனை
காங்கேயம்-திருப்பூர் சாலை சிவன்மலை அருகே நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாகப் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் பெரிய பையுடன் மோட்டார் சைக்கிளில் சென்றவரை பிடித்து விசாரித்தனர். 
அப்போது  அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த பைகளை சோதனை செய்தபோது அதில் மது பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது.
கைது
 விசாரணையில், அவர் புதுக்கோட்டை மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த நாகராஜ் (வயது 42) என்பதும், தற்போது அவர் சிவன்மலை, சரவணா நகரில் வசித்து வருவதும், மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்கள் கடந்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 235 மது பாட்டில்கள், ரூ.70 ஆயிரத்து 570 மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Next Story