அவினாசி அருகே பஞ்சு குடோனில் தீப்பிடித்ததால் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள கழிவு பஞ்சுகள் எரிந்து நாசமானது


அவினாசி அருகே பஞ்சு குடோனில் தீப்பிடித்ததால் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள கழிவு பஞ்சுகள் எரிந்து நாசமானது
x
தினத்தந்தி 1 July 2021 12:57 AM IST (Updated: 1 July 2021 12:57 AM IST)
t-max-icont-min-icon

அவினாசி அருகே பஞ்சு குடோனில் தீப்பிடித்ததால் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள கழிவு பஞ்சுகள் எரிந்து நாசமானது

அவினாசி
அவினாசி அருகே பஞ்சு குடோனில் தீப்பிடித்ததால் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள கழிவு பஞ்சுகள் எரிந்து நாசமானது. 4 மணி நேரம் போராடி அணைக்கப்பட்டது.
பஞ்சு குடோனில் தீ விபத்து 
அவினாசி ஒன்றியம் ஆலத்தூர் அருகே தனியார் காட்டன்யான் ஸ்பின்னிங் மில் உள்ளது. இந்த மில்லில் நூற்றுகணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் மில்லில் தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தனர். 
இந்த மில் வளாகத்தில் உள்ள கழிவு பஞ்சுகுடோனில் கழிவு பஞ்சு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் குடோனில் திடீரென கரும்புகையுடன் தீ பிடித்துள்ளது. அதை பார்த்த தொழிலாளர்கள் அலறியடித்து கொண்டு வெளியே வந்து அங்கிருந்த தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். 
தீயை அணைத்தனர்
இருப்பினும் கழிவு பஞ்சு மூட்டைகளில் தீ வேகமாக பரவி கொழுந்து விட்டு எரிந்தது. எனவே அவினாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தரப்பட்டது. உடனடியாக நிலைய அலுவலர் ராதாகிருஷ்ணன் (பொறுப்பு) தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 4 மணிநேரம் போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். 
மீண்டும் அதிக அளவில் புகை வந்ததால் பொக்லைன் எந்திரத்தின் மூலம் தீப்பிடித்து நாசமான நிலையில் இருந்த கழிவு பஞ்சு மூட்டைகளை கலைத்து போட்டு மேலும் தண்ணீர் அடித்து தீ கங்குகளை அணைத்தனர். மில்லில் வேலை பார்த்த தொழிலாளர்கள் வெளியே ஓடி வந்ததால் அசம்பாவிதம் ஏற்படவில்லை. மின் கசிவுகரணமாக தீ பிடித்திருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த தீ விபத்தால் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள கழிவு பஞ்சுகள் எரிந்து நாசமானது.

Next Story