பாலக்கரை பகுதியில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல்; போலீசார் நடவடிக்கை


பாலக்கரை பகுதியில்  தொடர்ந்து போக்குவரத்து நெரிசல்; போலீசார் நடவடிக்கை
x
தினத்தந்தி 1 July 2021 1:05 AM IST (Updated: 1 July 2021 1:05 AM IST)
t-max-icont-min-icon

பாலக்கரை பகுதியில் தொடர்ந்து ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

திருச்சி, 
பாலக்கரை பகுதியில் தொடர்ந்து ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

போக்குவரத்து நெரிசல் 

திருச்சி பாலக்கரை பிரசாத் ரவுண்டானா அருகே கடந்த சில நாட்களாக சாக்கடை கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அங்கு அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. 

இந்தநிலையில் ஊரடங்கில் இருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டதால் அங்கு கூடுதல் நெருக்கடி ஏற்பட்டு தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.  இதனால் அந்த பகுதியை வாகனங்கள் கடந்து செல்ல நீண்ட நேரம் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் போலீசார் தற்போது புதிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 

அனுமதி இல்லை

அதன்படி மேலப்புதூரில் இருந்து வேர்ஹவுஸ் வழியாக பாலக்கரை செல்ல இரு சக்கர வாகனங்கள் மற்றும் பயணிகள் ஆட்டோ தவிர மற்ற வாகனங்களுக்கு அனுமதி இல்லை. மற்ற வாகனங்கள் அனைத்தும் மார்சிங்பேட்டை, பீமநகர் வழியாக சுற்றி தான் செல்ல வேண்டும். இதற்காக மேலப்புதூரிலிருந்து சுரங்கப்பாதை இறங்கும் வழியில் போலீசார் தடுப்பு அமைத்து உள்ளனர். 

இதைப்போல் வேர்ஹவுஸில் இருந்து பாலக்கரை மேம்பாலம் வரை ஒருபுறம் மட்டுமே வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இருபுறமும் வாகனத்தை நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

Next Story