சமையல் சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஒப்பாரி போராட்டம்


சமையல் சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஒப்பாரி போராட்டம்
x
தினத்தந்தி 1 July 2021 1:39 AM IST (Updated: 1 July 2021 1:39 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரத்தில் சமையல் சிலிண்டருக்கு மாலை அணிவித்து கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

பாவூர்சத்திரம்:
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பாவூர்சத்திரத்தில் சமையல் கியாஸ் சிலிண்டருக்கு கம்யூனிஸ்டு கட்சியினர் ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர்.

பாவூர்சத்திரம்

பாவூர்சத்திரம் பஸ் நிலையம் அருகில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஒப்பாரி போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் எம்.தங்கம் தலைமை வகித்தார். ஒன்றியக்குழு உறுப்பினர் முருகேசன், லெனின் கம்யூனிஸ்ட் மாவட்ட குழு உறுப்பினர் அய்யப்பன், கம்யூனிஸ்ட் மாவட்ட குழு உறுப்பினர் கிட்டப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட துணை செயலாளர் சுப்பையா ஒப்பாரி போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

போராட்டத்தில் கம்யூனிஸ்டு மாவட்ட செயற்குழு உறுப்பினர் குணசீலன், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் மணி, லெனின் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் இன்னாசிசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஒப்பாரி போராட்டம் நடத்தினர். மேலும் வருமான வரி வரம்புக்குள் வராத அனைத்து குடும்பங்களுக்கும் 6 மாதங்களுக்கு தலா ரூபாய் 7,500 நிவாரணம் வழங்க வேண்டும், 3 விவசாய வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், தமிழகத்துக்கு கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும் என்பன உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சிவகிரி- சங்கரன்கோவில்

இதேபோல் சிவகிரியில் இந்திய கம்யூனிஸ்டு நகர செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையிலும், சங்கரன்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் அசோக்ராஜ் தலைமையிலும், வீரகேரளம்புதூர் தாலுகா அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு தாலுகா தலைவர் அய்யப்பன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Next Story