கார் மோதி தொழிலாளி பலி


கார் மோதி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 1 July 2021 1:46 AM IST (Updated: 1 July 2021 1:46 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளம் அருகே கார் மோதி தொழிலாளி இறந்தார்.

ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே தறிகெட்டு ஓடிய கார் மோதி முதியவர் பலியானார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

தறிகெட்டு ஓடிய கார் மோதி...

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே குறிப்பன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருண் (வயது 30). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார்.
அருண் நேற்று மாலையில் தனது வீட்டில் இருந்து காரில் நெட்டூருக்கு புறப்பட்டு சென்றார். குறிப்பன்குளம் மெயின் ரோடு பகுதியில் சென்றபோது, கார் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது.

சாவு

அப்போது அப்பகுதியைச் சேர்ந்த அருணாசலம் (70) என்பவர் தனது வீட்டின் முன்பாக சிலருடன் பேசிக் கொண்டிருந்தார். அவர்கள் மீது பயங்கரமாக மோதிய கார், அங்குள்ள வீட்டின் சுவற்றில் ேமாதி நின்றது. இதில் பலத்த காயமடைந்த அருணாசலம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
மேலும் மருதப்புரத்தைச் சேர்ந்த மாரி (53), சுடலைக்கண்ணு (80) ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். உடனே அவர்களை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருணை கைது செய்தனர்.

Next Story