பெரம்பலூரில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்


பெரம்பலூரில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 July 2021 2:01 AM IST (Updated: 1 July 2021 2:01 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

பெரம்பலூர்
சட்டசபையில் கவர்னர் உரையில் ஜெய்ஹிந்த் வார்த்தையை நீக்கியதால் தமிழகம் தலை நிமிர்ந்தது என்று பேசிய ஈஸ்வரன் எம்.எல்.ஏ.வை கண்டித்தும், அந்த பேச்சை அவைக் குறிப்பிலிருந்து நீக்கக்கோரியும் பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே நேற்று மாலை இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு இந்து முன்னணியின் பெரம்பலூர் மாவட்ட துணைத் தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இந்து முன்னணியினர் தேசிய கொடியை கையில் ஏந்தியவாறு ஈஸ்வரன் எம்.எல்.ஏ.வை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்ற கோஷம் எழுப்பினர்.


Next Story