570 வாகனங்கள் பறிமுதல்
ராமநாதபுரத்தில் கொரோனா ஊரடங்கு விதிகளை மீறி சாலைகளில் சுற்றி திரிந்த 570 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ராமநாதபுரம்,
ராமநாதபுரத்தில் கொரோனா ஊரடங்கு விதிகளை மீறி சாலைகளில் சுற்றி திரிந்த 570 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சோதனை
ராமநாதபுரம் கொரோனா பரவலை தடுக்க அரசின் உத்தரவின்படி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடுமையாக பின்பற்ற காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி ராமநாதபுரத்தில் போலீசார் அந்தந்த பகுதியில் நடத்திய சோதனையில் முககவசம் அணியாமல் சென்றதாக 10 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு விதிகளை மீறி தேவையின்றி வாகனங்களில் சுற்றிதிரிந்ததாக ராமநாதபுரத்தில் இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் 570 பேரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதில் இதுவரை 560 வாகனங்கள் உரியவர்களிடம் திருப்பி ஒப்படைக்க பட்டுள்ளது. இதன்படி மீதம் காவல்துறை வசம் 10 வாகனங்கள் மட்டுமே உள்ளது. இந்த வாகனங்கள் உரிய வழிகாட்டுதலின்படி உரிமை யாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
வழக்குகள் பதிவு
ராமநாதபுரத்தில் போக்குவரத்து விதிகளின் கீழ் நடத்தப்பட்ட சோதனையில் செல்போன் பேசிக்கொண்டும், அதிக வேகத்திலும் சென்றதாக 28 பேர் மீதும், தலைக்கவசம் அணியாமலும், தலைக்கவசம் அணியாமல் பின்னால் அமர்ந்து சென்றதாகவும் 495 வழக்குகளும், இதர பிரிவுகளின் கீழ் 128 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story