பெரம்பலூரில் கொரோானாவுக்கு ஒருவர் பலி


பெரம்பலூரில் கொரோானாவுக்கு ஒருவர் பலி
x
தினத்தந்தி 1 July 2021 2:17 AM IST (Updated: 1 July 2021 2:17 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் கொரோானாவுக்கு ஒருவர் பலியானார்

பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 22 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், கொரோனாவுக்கு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 60 வயது முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 198 ஆக உயர்ந்துள்ளது.  தற்போதைய நிலவரப்படி 264 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 776 பேருகு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 322 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. அந்தவகையில் இதுவரை மொத்தம் 1 லட்சத்து 7 ஆயிரத்து 957 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.


Next Story