அரியலூரில் கொரோனாவுக்கு 5 பேர் பலி
அரியலூரில் கொரோனாவுக்கு 5 பேர் பலியானார்கள்
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் நேற்று 55 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற 87 பேர் குணமடைந்ததால் அவர்கள் அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
ஆனால் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 65, 53 வயது ஆண்கள் 2 பேரும், 68, 60 வயது 2 மூதாட்டிகளும், சென்னை கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அரியலூரை சேர்ந்த 32 வயது பெண் ஒருவரும் என மொத்தம் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 211 ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி 520 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 932 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வர வேண்டியவுள்ளது.

Related Tags :
Next Story