மதுக்கடைகளை மூட அரசாணை வெளியிடக் கோரி ஆர்ப்பாட்டம்
மதுக்கடைகளை மூட அரசாணை வெளியிடக் கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
பரமக்குடி,
மதுக்கடைகளை மூட அரசாணை வெளியிடக்கோரி பரமக்குடி பஸ் நிலையம் அருகே தாய் தமிழர் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில அமைப்பு செயலாளர் முனியசாமி தலைமை தாங்கினார். ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் கணேசன், மாவட்ட தலைவர் திருப்பதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு கட்டுப்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கட்சியின் நிறுவன தலைவர் பாண்டியன், பொதுச்செயலாளர் செல்வம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தின் போது கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கோவை மாவட்ட செயலாளர் பரத் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story