மேட்டூர் பழைய அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கியது
மேட்டூர் பழைய அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கியது.
மேட்டூர்
தீ விபத்து
மேட்டூரில் 840 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட பழைய அனல் மின் நிலையம் 4 யூனிட்டுகளுடன் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு யூனிட்டிலும் தலா 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கடந்த மே மாதம் 18-ந் தேதி இந்த அனல் மின் நிலையத்தில் நிலக்கரி எடுத்துச் செல்லும் கன்வேயர் பெல்ட்டில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் கன்வேயர் பெல்ட் முற்றிலும் எரிந்து நாசமானது.
இதனால் இந்த அனல் மின் நிலையத்தின் 4 யூனிட்களுக்கும் நிலக்கரி எடுத்துச் செல்லும் பணி முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த மே 20-ஆம் தேதி முதல் இந்த அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டது.
மீண்டும் செயல்பட தொடங்கியது
இதையடுத்து தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தீ விபத்து நடந்த இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு விரைந்து சீரமைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பிறகு கன்வேயர் பெல்ட் சரிசெய்யும் பணி முழுவீச்சில் நடந்து வந்தது. நேற்றுடன் அந்த பணிகள் முடிவடைந்தன.
இதனால் நிலக்கரி எடுத்து செல்லும் பெல்ட் மீண்டும் செயல்பட தொடங்கியது. 4 யூனிட்களுக்கும் நிலக்கரி எடுத்துச் செல்லும் பணி நடந்து வருகிறது. 1,2, 4-வது யூனிட்டில் மின் உற்பத்தி நேற்று தொடங்கியது. 3-வது யூனிட்டிலும் விரைவில் மின் உற்பத்தி தொடங்கும் என்று என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story