பரமத்திவேலூரில் ஊரடங்கு விதிகளை மீறி இயங்கிய 3 செல்போன் கடைகளுக்கு அபராதம்
பரமத்திவேலூரில் ஊரடங்கு விதிகளை மீறி இயங்கிய 3 செல்போன் கடைகளுக்கு அபராதம்
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் பகுதியில் கொரோனா தடுப்பு மற்றும் ஊரடங்கு விதிமுறைகளை மீறி குளிர்சாதன வசதியுடன் செல்போன் விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் செயல்படுவதாக பரமத்திவேலூர் தாசில்தார் சுந்தரவள்ளிக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலில் அடிப்படையில் தாசில்தார் உத்தரவுப்படி வருவாய் ஆய்வாளர் ஷோபனா, கிராம நிர்வாக அலுவலர் செல்வி மற்றும் வருவாய் துறையினர் சம்பந்தப்பட்ட செல்போன் கடைகளுக்கு சென்று ஆய்வு நடத்தினர்.
அதில் பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலை மற்றும் அண்ணா சாலை பகுதிகளில் ஊரடங்கு மற்றும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், குளிர்சாதன வசதியுடன் இயங்கிய 3 செல்போன் விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகளுக்கு மொத்தம் ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.
Related Tags :
Next Story