பரமத்தி அருகே அனுமதியின்றி வெள்ளை கற்கள் ஏற்றி வந்த லாரி பறிமுதல் டிரைவர் கைது


பரமத்தி அருகே அனுமதியின்றி வெள்ளை கற்கள் ஏற்றி வந்த லாரி பறிமுதல் டிரைவர் கைது
x
தினத்தந்தி 30 Jun 2021 9:10 PM GMT (Updated: 30 Jun 2021 9:10 PM GMT)

பரமத்தி அருகே அனுமதியின்றி வெள்ளை கற்கள் ஏற்றி வந்த லாரி பறிமுதல் டிரைவர் கைது

பரமத்திவேலூர்:
கரூர் மாவட்டத்தில் இருந்து ‌நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதிக்கு அரசு அனுமதியின்றி வெள்ளை கற்கள் (வெங்கச்செங்கல்) லாரியில் கொண்டு வருவதாக நாமக்கல் புவியியல் மற்றும் சுரங்க துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் நாமக்கல் புவியியல் மற்றும் சுரங்கதுறை உதவி இயக்குனர் பூர்ணவேல் மற்றும் பரமத்தி போலீசார் பரமத்தி அருகே நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். 
அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் லாரியில் வெள்ளை கற்கள் (வெங்க செங்கல்) இருப்பதும், அவை கரூர் மாவட்டம் வெள்ளியனையில் இருந்து பரமத்திவேலூர் அருகே பில்லூரில் உள்ள கல் அரைக்கும் ஆலைக்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து உரிய அனுமதியின்றி வெள்ளை கற்கள் (வெங்க செங்கல்) ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள் லாரி டிரைவர் திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரம் பெருமாள் கோவில் காலனியை சேர்ந்த சுப்பிரமணியை (38) கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story