குழந்தைகளுடன் மறியல் செய்த பெண்கள்


குழந்தைகளுடன் மறியல் செய்த பெண்கள்
x
தினத்தந்தி 1 July 2021 5:25 PM IST (Updated: 1 July 2021 5:25 PM IST)
t-max-icont-min-icon

பழனியில், கம்பளி பூச்சிகளால் பாதிப்பு ஏற்படுவதாக கூறி குழந்தைகளுடன் பெண்கள் மறியலில் ஈடுபட்டனர்.

 பழனி:

பழனி 13-வது வார்டு பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான பூங்கா உள்ளது. இந்த பூங்காவை சுற்றிலும் ஏராளமான வீடுகள் உள்ளன. 

கடந்த சில நாட்களாக பூங்காவில் உள்ள மரங்களில் ஏராளமான கம்பளி பூச்சிகள் இருப்பதாகவும், அவை அருகே உள்ள வீடுகளுக்குள் புகுந்து குழந்தைகள் உள்பட அனைவரையும் கடிப்பதால் உடல்களில் அரிப்பு ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். 

எனவே மரங்களில் மருந்து தெளித்து கம்பளி பூச்சிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். 

ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள், தங்களது குழந்தைகளுடன் நேற்று பழனியில், பழைய தாராபுரம் சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அப்போது கம்பளி பூச்சிகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் உறுதி அளித்தனர். இ்தனையடுத்து மறியலை கைவிட்டு பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story