தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறையில் கொரோனாவுக்கு 7 பேர் பலி டெல்டாவில் ஒரே நாளில் 357 பேருக்கு தொற்று


தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறையில் கொரோனாவுக்கு 7 பேர் பலி டெல்டாவில் ஒரே நாளில் 357 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 1 July 2021 3:24 PM GMT (Updated: 1 July 2021 3:24 PM GMT)

தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் கொரோனாவுக்கு 7 பேர் பலியானார்கள். டெல்டாவில் ஒரே நாளில் 357 பேருக்கு தொற்று உறுதியானது.

தஞ்சாவூர், 

தஞ்சை மாவட்டத்தில் நேற்று மேலும் 197 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 63 ஆயிரத்து 575 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 225 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 60 ஆயிரத்து 906 பேர் குணம் அடைந்துள்ளனர்.

கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 32, 79 வயதுடைய 2 ஆண்களும், 46 வயது பெண்ணும் என 3 பேர் உயிரிழந்தனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 708 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,961 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாகை மாவட்டத்தில் நேற்று மேலும் 45 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 850 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 21 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர்.

இதுவரை 17 ஆயிரத்து 273 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 311 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 266 பேர் உயிரிழந்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று 44 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 ஆயிரத்து 177 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 53 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 19 ஆயிரத்து 635 பேர் குணம் அடைந்துள்ளனர்.

கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 70 வயது முதியவரும், 50 வயது பெண்ணும் என 2 பேர் உயிரிழந்தனர். இதுவரை 252 பேர் பலியாகி உள்ளனர். தற்போது 290 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று மேலும் 71 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 36 ஆயிரத்து 814 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 85 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 35 ஆயிரத்து 890 பேர் குணம் அடைந்துள்ளனர்.

கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 42, 62 வயதுடைய 2 ஆண்கள் பலியானார்கள். இதன்மூலம் பலியானோர் எண்ணிக்கை 327 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 597 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story