முத்துப்பேட்டை அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை
முத்துப்பேட்டை அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை போலீசில் புகார்.
முத்துப்பேட்டை,
முத்துப்பேட்டையை அடுத்த உப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ரெத்தினவேல் (வயது30). இவருக்கும், மன்னார்குடியை அடுத்த பாளையக்கோட்டை கிராமத்தை சேர்ந்த கிருபாகரன் மகள் பிரதீபாவுக்கும் (26) கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 வயதில் நிவிதா என்ற பெண் குழந்தை உள்ளது. ரெத்தினவேல் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். இந்தநிலையில் பிரதீபா நேற்றுமுன்தினம் வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு கொண்டார். தகவல் அறிந்த முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரதீபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பிரதீபாவின் தந்தை கிருபாகரன் முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரில் தனது மகளை மாமனார், மாமியார், கொழுந்தனார் கொடுமைப்படுத்தி வந்ததாகவும், மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் கூறியிருந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இறந்த பிரதீபாவுக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் மன்னார்குடி ஆர்டி.ஓ. விசாரணை நடத்துகிறார்.
Related Tags :
Next Story