தர்மபுரி மாவட்டத்தில் 109 பேருக்கு கொரோனா
தர்மபுரி மாவட்டத்தில் 109 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் புதிதாக 109 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இவர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனை மற்றும் தற்காலிக தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தர்மபுரி மாவட்டத்தில் ஏற்கனவே 822 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 71 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்கள். மாவட்டம் முழுவதும் 860 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை மொத்த பாதிப்பு 39,986 ஆகும்.
Related Tags :
Next Story