திருத்துறைப்பூண்டி பகுதியில் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு முட்டை வழங்கும் திட்டம்


திருத்துறைப்பூண்டி பகுதியில் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு முட்டை வழங்கும் திட்டம்
x
தினத்தந்தி 1 July 2021 9:50 PM IST (Updated: 1 July 2021 9:50 PM IST)
t-max-icont-min-icon

திருத்துறைப்பூண்டி பகுதியில் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு முட்டை வழங்கும் திட்டம் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

திருத்துறைப்பூண்டி,

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை கா்ப்பிணி பெண்களுக்கு கடந்த ஆண்டு மே மாதம் முதல் காய்கறி, பழங்கள், நெல்லிக்காய், பேரீச்சம்பழம், எலுமிச்சைபழம் ஆகியவை வழங்கி வரும் திட்டத்தினை திருத்துறைப்பூண்டி பாரதமாதா குடும்பநல நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. காய்கறி திட்டத்தால் பயன்பெற்று வரும் 100 கா்ப்பிணிகளுக்கு பிறந்துள்ள 100 குழந்தைகளுக்கு தினமும் ஒரு முட்டை வழங்கும் வகையில் மாதம் 3 ஆயிரம் முட்டைகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று திருத்துறைப்பூண்டி பாரதமாதா குடும்பநல நிறுவனத்தின் சார்பில் 2 வயதுக்குட்பட்ட 100 குழந்தைகளுக்கு தினமும் முட்டை வழங்கும் திட்டத்தினை மாவட்ட கலெக்டா் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் முத்தமிழ்ச்செல்வி, குழந்தைகள் நலக்குழு தலைவா் ஜீவானந்தம், குழந்தைகள் நலக்குழு உறுப்பினா்கள் சங்கீதா மணிமாறன், டாக்டர் பாஸ்கர், ஆரோக்கியசாமி மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

இத்திட்டம் மேலும் 1000 கா்ப்பிணி பெண்களுக்கும் மற்றும் குழந்தைகளுக்கும் விரிவுப்படுத்தப்படும் என்று பாரதமாதா குடும்பநல நிறுவன இயக்குனர் எடையூா் மணிமாறன் தெரிவித்தார்.

Next Story