விவசாயத்துடன் உபதொழில்களையும் கடைபிடித்தால் பொருளாதாரம் மேம்படும் -கலெக்டர் பாலசுப்பிரமணியம் அறிவுரை


விவசாயத்துடன் உபதொழில்களையும் கடைபிடித்தால் பொருளாதாரம் மேம்படும் -கலெக்டர் பாலசுப்பிரமணியம் அறிவுரை
x
தினத்தந்தி 1 July 2021 9:50 PM IST (Updated: 1 July 2021 9:50 PM IST)
t-max-icont-min-icon

விவசாயத்துடன் உபதொழில்களையும் கடைபிடித்தால் பொருளாதாரம் மேம்படும் என விவசாயிகளுக்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் அறிவுரை வழங்கி உள்ளார்.

கடலூர், 

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையுடன் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையமும் இணைந்து வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் கீழ் கால்நடை மற்றும் கோழிப்பண்ணைகளில் உயிர் பாதுகாப்பு முறைகள் குறித்த பயிற்சி முகாமை கடலூர் செம்மண்டலத்தில் நடத்தியது. இந்த பயிற்சி முகாமை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்து, கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த விதைகள், அரிசி உள்ளிட்டவைகளை பார்வையிட்டார்.

முதன்மை தொழில்

பின்னா் அவா் கூறுகையில், கடலூர் மாவட்டம் விவசாயத்தை முதன்மை தொழிலாக கொண்ட மாவட்டமாகும். விவசாயிகளின்முன்னேற்றத்திற்காக வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் சகோதர துறைகள் மூலம் பல்வேறு தொழில்நுட்ப நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. 
தற்போது உள்ள நவீன உலகில் வேளாண்மை விரிவாக்க சேவைகளை, அனைத்து விவசாயிகளிடமும் கொண்டு சேர்க்க உருவாக்கப்பட்டதுதான் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை என்ற பதிவு செய்யப்பட்ட சங்கமாகும். இந்த முகமையானது வேளாண்மை உழவர் நலத்துறை தோட்டக்கலை, கால்நடை, வேளாண்பொறியியல், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம், விதைச்சான்று, வனம்,  பட்டுவளர்ச்சி, மீன்வளர்ப்பு ஆகிய 9 துறைகளை உள்ளடக்கி செயல்படுகிறது. 

தீவன விதைகள்

மேலும் விவசாயம் மட்டுமல்லாமல் உபதொழில்களையும், குறிப்பாக கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு உள்ளிட்டவைகளையும் ஒருசேர கடைபிடித்தால் மட்டுமே வருமானம் உயர்ந்து விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படும் என்றாா். தொடர்ந்து பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு தாதுஉப்பு, தீவன விதைகள் உள்ளிட்டவற்றை வழங்கினார்.

Next Story