மரத்தில் இருந்து கீழே விழுந்தவர் பலி


மரத்தில் இருந்து கீழே விழுந்தவர் பலி
x
தினத்தந்தி 1 July 2021 10:18 PM IST (Updated: 1 July 2021 10:18 PM IST)
t-max-icont-min-icon

பள்ளத்தூர் அருகே மரத்தில் இருந்து கீேழ விழுந்தவர் இறந்தார்.

காரைக்குடி,

பள்ளத்தூர் போலீஸ் சரகம் கோட்டையூர் சொற்கேட்டான் தெருவைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம்.(வயது 36). இவர் வீட்டருகே அருகே உள்ள மாமரத்தில் ஏறி மாங்காய் பறிக்க முயன்றார். அப்போது தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த அடிபட்டது. உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் வழியிலேயே சொக்கலிங்கம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து பள்ளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Related Tags :
Next Story