பெண்ணை தாக்கியவர் கைது


பெண்ணை தாக்கியவர் கைது
x
தினத்தந்தி 1 July 2021 11:21 PM IST (Updated: 1 July 2021 11:21 PM IST)
t-max-icont-min-icon

பெண்ணை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்

விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள ரோசல்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் காளீஸ்வரி(வயது 49). இவர் அங்குள்ள முனியாண்டி கோவில் அகல்விளக்கை சேதப்படுத்திய அதே பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜன்(24) என்பவரை கண்டித்தாராம். இதனால் ஆத்திரம் அடைந்த பாண்டியராஜன் காளீஸ்வரியை கல்லால் தாக்கி படுகாயப்படுத்தியதோடு அவரது கணவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் பாண்டியன்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டியராஜனை கைது செய்தனர்.

Next Story