தளி அருகே ரவுடி கொலையில் தொடர்புடைய 3 பேர் கர்நாடகாவில் பதுங்கலா? தனிப்படை போலீசார் தீவிர விசாரணை


தளி அருகே ரவுடி கொலையில் தொடர்புடைய 3 பேர் கர்நாடகாவில் பதுங்கலா? தனிப்படை போலீசார் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 1 July 2021 11:21 PM IST (Updated: 1 July 2021 11:21 PM IST)
t-max-icont-min-icon

தளி அருகே ரவுடி கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேர் கர்நாடக மாநிலத்தில் பதுங்கி உள்ளார்களா? என தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தேன்கனிக்கோட்டை:


ரவுடி கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள கும்ளாபுரத்தை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 29). ரவுடியான இவர் மீது கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் குண்டர் சட்டத்திலும் சிறை சென்று வந்தவர். கடந்த 29-ந் தேதி இரவு இவர் கும்ளாபுரம் பகுதியில் காரில் வந்து கொண்டிருந்த போது மர்ம நபர்களால் வழிமறித்து சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை தொடர்பாக தளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது கொலை செய்யப்பட்ட உதயகுமாரும், கும்ளாபுரத்தை சேர்ந்த டிராக்டர் டிரைவர் ரவி என்கிற பகவதா (30), சம்பங்கி (35), வஜ்ரமணி (32) ஆகியோர் நண்பர் ஆவார்கள். மேலும் இவர்கள் 3 பேரும் அண்ணன்-தம்பிகள் ஆவார்கள்.
3 பேருக்கு வலைவீச்சு
இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி கங்கம்மா கோவில் திருவிழாவிற்காக உதயகுமார் வந்தார். அப்போது அவருக்கும், ரவி, சம்பங்கி, வைரமணி ஆகிய 3 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதன் பிறகு உதயகுமார் வீட்டிற்கு தனது காரில் சென்று கொண்டிருந்தார். அவரை ரவி, சம்பங்கி, வைரமணி ஆகியோர் வழிமறித்து அரிவாளால் வெட்டிக்கொலை செய்தது தெரிய வந்தது. 
மேலும் அவர் வந்த காரையும் உடைத்து சேதப்படுத்தி சென்றது தெரிய வந்தது. இந்த கொலை தொடர்பாக தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவி, சம்பங்கி, வைரமணி ஆகிய 3 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள். அவர்கள் கர்நாடக மாநிலத்திற்கு சென்று பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளார்கள்.

Next Story