மின்னல் தாக்கியதில் பட்டாசு ஆலையில் தீ


மின்னல் தாக்கியதில் பட்டாசு ஆலையில் தீ
x
தினத்தந்தி 1 July 2021 11:41 PM IST (Updated: 1 July 2021 11:41 PM IST)
t-max-icont-min-icon

மின்னல் தாக்கியதில் பட்டாசு ஆலையில் தீப்பிடித்தது

தாயில்பட்டி
தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த ராமமூர்த்தி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை சேதுராமலிங்காபுரத்தில் உள்ளது. இந்த பகுதியில் நேற்று இடியுடன் மழை பெய்தது. அப்போது பட்டாசு ஆலைக்குள் மின்னல் தாக்கியது. இதனால் பட்டாசு தயாரிக்கும் அறைக்கு வெளியில் உள்ள சல்பர் மூடை தீப்பிடித்து வெடித்து சிதறியது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் காந்தையா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மழை பெய்ததால் பட்டாசு ஆலையில் முன்கூட்டியே பட்டாசு உற்பத்தி நிறுத்தப்பட்டு தொழிலாளர் அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் பட்டாசு அறைக்கு வெளியில் தீப்பிடித்ததால் பெரிய சேதம் இல்லை.

Next Story