புகையிலை, குட்கா பறிமுதல்


புகையிலை, குட்கா பறிமுதல்
x
தினத்தந்தி 1 July 2021 11:42 PM IST (Updated: 1 July 2021 11:42 PM IST)
t-max-icont-min-icon

தேவகோட்டையில் லாரி பார்சல் மூலம் சப்ைள செய்த புகையிலை, குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

தேவகோட்டை,

தேவகோட்டையில் உள்ள லாரி புக்கிங் அலுவலகத்திற்கு நேற்று பார்சல் ஒன்று வந்தது.அந்த பார்சலில் "பாத்திமா" என எழுதப்பட்டிருந்தது.இதனால் லாரி லோடுமேன்கள் தேவகோட்டையில் உள்ள ஒரு ஜவுளி கடைக்கு அந்த பார்சலை கொண்டு வந்து இறக்்கினர்.அந்த கடையின் உரிமையாளர் ஸ்டாலின் பார்சலை பிரித்து பார்த்தபோது அதில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக், புகையிலை போன்ற பொருட்கள் இருந்தது கண்டு திடுக்கிட்டார். உடனடியாக தேவகோட்டை நகர காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் சரவணன் அங்கு விரைந்து வந்தார். அவர் விசாரணை நடத்தியபோது தேவகோட்டை பஸ் நிலையத்தில் உள்ள ஒரு பெட்டிக்கடைக்கு இந்த பார்சல் வந்தது என்றும், தவறுதலாக லாரி புக்கிங் அலுவலகத்தினர் இங்கு இறக்கி விட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அந்த கடைக்குச் சென்று சோதனையிட்டனர். பின்னர் அந்த கடையின் உரிமையாளர் அபூபக்கர் சித்திக்கை கைது செய்தனர். கைப்பற்றப்பட்ட புகையிலை, குட்கா ரூ.1 லட்சத்திற்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.


Next Story