நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கனமழை வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி
நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கனமழை வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கனமழை பெய்தது. மோகனூரில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
புதுச்சத்திரம், மோகனூர்
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்தநிலையில் நேற்று மதியம் 2 மணியளவில் அதிக வெப்பச்சலனம் காரணமாக புதுச்சத்திரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் திடீர் கனமழை பெய்தது. ஒரு மணி நேரத்துக்கு மேலாக பெய்த இந்த கனமழையால் வயல் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. இந்த திடீர் மழையால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலவியது.
மோகனூர் பகுதியில் கடந்த சில தினங்களாக கடும் வெயில் வாட்டி வதைத்தது. இந்தநிலையில் மோகனூர், எஸ்.வாழவந்தி மற்றும் வளையப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சுமார் 1 மணி நேரம் பெய்த பலத்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வீடுகளுக்குள் தண்ணீர்...
மோகனூர் பேரூராட்சி பகுதியில் பெய்த கனமழையால் மழைநீரானது கழிவுநீருடன் சேர்ந்து வேலூர் செல்லும் சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலம் அருகே தேங்கி நின்றது. இதனால் அருகில் குடியிருப்புகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் தண்ணீரை வெளியேற்ற முடியாமல் அவதியடைந்தனர்.
அதிக மழை பெய்யும் நேரத்தில் அடிக்கடி ெரயில்வே மேம்பாலத்தில் தண்ணீர் தேங்கி அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்து போக்குவரத்து பாதிப்படைவது தொடர்கதையாகி வருகிறது என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடியிருப்புக்குள் தண்ணீர் புகுவதை தடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமகிரிப்பேட்ைட, பரமத்திவேலூர்
நாமகிரிப்பேட்டையில் நேற்று காலை முதல் மாலை வரை கடுமையான வெயில் அடித்தது. பின்னர் மாலை திடீரென கருமேகம் திரண்டு ½ மணி நேரம் இடியுடன்கூடிய கனமழை பெய்தது. தொடர்ந்து இரவு 8 மணிக்கு மேல் 2-வது முறையாக பலத்த மழை கொட்டியது. இதனால் ஆங்காங்கே தாழ்வான பகுதியில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
பரமத்தி வேலூர் வட்டாரத்தில் பகல் நேரத்தில் வெயில் வாட்டி, வதைத்து வந்தது. இந்த நிலையில் வியாழக்கிழமை மாலை திடீர் என இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் பல்வேறு தளவுகளுடன் பொதுமுடக்கம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மாலை 7 மணிக்குள் வர்த்தக நிறுவனங்களை மூட வேண்டும் என்ற நிலையில் திடீர் என பெய்த மழையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். மேலும் சிலர் மழையில் நனைந்தபடி தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச்சென்றனர்.
Related Tags :
Next Story