கரூர் மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் பலத்த மழை


கரூர் மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் பலத்த மழை
x
தினத்தந்தி 2 July 2021 12:24 AM IST (Updated: 2 July 2021 12:24 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. வேலாயுதம்பாளையத்தில் மரக்கிளைகள் ஒடிந்து விழுந்தன.

கரூர்
பலத்த மழை
தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வாட்டி வருகிறது. இதில் கரூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்து காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். கரூரில் நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் மாலை சுமார் 5 மணியளவில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது. திடீரென மழை பெய்ய தொடங்கியது. இந்த மழையானது பசுபதிபாளையம், சுங்ககேட் உள்ளிட்ட கரூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் பெய்தது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. 
வாகன ஓட்டிகள் அவதி
மேலும் கரூர் ஜவகர்பஜார், பழைய திண்டுக்கல் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீருடன் சேர்ந்து சாக்கடை நீரும் சாலையில் வழிந்தோடியது. இதனால் அப்பகுதியின் வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து சென்றவர்கள் அவதி அடைந்தனர். இந்த மழை இரவு வரை நீடித்தது. இந்த திடீர் மழையால் பூமி குளிர்ந்து காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

Next Story