சேலம் மாவட்டத்தில் புதிதாக 279 பேருக்கு கொரோனா 5 பேர் பலி
சேலம் மாவட்டத்தில் புதிதாக 279 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 5 பேர் தொற்றுக்கு பலியாகினர்.
சேலம்
கொரோனா பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 300-க்கு கீழ் குறைந்துள்ளது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 295 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று புதிதாக 279 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 47 பேரும், சேலம் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் 112 பேரும், ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் 35 பேரும், நகராட்சி பகுதிகளில் 23 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர பிற மாவட்டங்களில் இருந்து சேலம் மாவட்டத்துக்கு வந்த 62 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருந்தது தெரியவந்தது.
88 ஆயிரத்தை தாண்டியது
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் தற்காலிகமாக அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் உள்பட மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 88 ஆயிரத்து 205 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்த 492 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
1,685 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சேலத்தை சேர்ந்த பெண் உள்பட 5 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி ஆஸ்பத்திரிகளில் பலியாகினர். இவர்கள் உள்பட மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 1,477 ஆக அதிகரித்துள்ளது.
Related Tags :
Next Story