மணல் கடத்த முயன்ற 3 பேர் கைது
மணல் கடத்த முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மலைக்கோட்டை
திருச்சி சிந்தாமணி மற்றும் தேவதானம் கிராம நிர்வாக அலுவலர் வெற்றிச்செல்வன் நேற்று காலை திருச்சி கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் இருந்து சரக்கு ஆட்டோ மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளில் சிலர் மணல் அள்ளி கடத்த முயன்றனர். இதுகுறித்து கோட்டை போலீசாருக்கு வெற்றிச்செல்வன் தகவல் கொடுத்தார். அதன்பேரில், கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காவிரி ஆற்றில் இருந்து மணல் கடத்த முயன்ற தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், நாகராஜ் மற்றும் பூலோகநாதர் கோவில் தெருவை சேர்ந்த கார்த்திக் ஆகிய 3 பேரை கைது செய்தனர். சரக்கு ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story