தீக்குளித்த தொழிலாளி சாவு
மூலைக்கரைப்பட்டி அருகே தீக்குளித்த தொழிலாளி இறந்தார்.
இட்டமொழி:
மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள எடுப்பல் கிராமம் கக்கன் பெருவை சேர்ந்தவர் வேலுச்சாமி மகன் இசக்கிமுத்து (வயது 31), சுமை தூக்கும் தொழிலாளி. இவருடைய மனைவி சுமதி (30). இவர்களுக்கு திருமணம் முடிந்து 10 ஆண்டுகள் ஆகிறது. கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு காரணமாக இசக்கிமுத்து மது குடித்துவிட்டு வந்து வாக்குவாதத்தில் ஈடுபடுவது வழக்கம். சம்பவத்தன்று மதுபோதையில் வீட்டுக்கு வந்த இசக்கிமுத்து, தனது மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்ரோலை பாட்டிலில் பிடித்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் படுகாயமடைந்த இசக்கிமுத்து, பாளையங்கோட்டை ஐகிரவுண்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மூலைக்கரைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story