போலி பீடிகள் தயாரித்த 3 பேர் கைது
ஆலங்குளம் அருகே போலி பீடிகள் தயாரித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் தங்களது நிறுவனத்தின் பெயரில் போலியாக பீடி தயாரித்து விற்பனை செய்வதாக தனியார் பீடி கம்பெனியின் மேலாளர் அப்துல் அஜீஸ், ஆலங்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, ஆலங்குளம் பகுதியில் உள்ள வீட்டை சோதனை செய்தனர்.
சோதனையில் அங்கு தனியார் பீடி கம்பெனி பெயரில் பீடிகள் தயாரித்தது தெரியவந்தது. அங்கு வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்த அசோக் (வயது 26), அன்பு (29), கருப்பசாமி (29) ஆகியோரை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் காளாத்திமடத்தை சேர்ந்த முருகன், குருவன்கோட்டையை சேர்ந்த லிங்கம், ஆலங்குளத்தை சேர்ந்த மோகன் ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட போலி பீடிகளின் மதிப்பு சுமார் ரூ.6.30 லட்சம் ஆகும்.
Related Tags :
Next Story