சேலம் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு இதுவரை 335 பேர் பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு இதுவரை 335 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று நன்றாக குறைந்து வருகிறது. இதனிடையே கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அதில் இருந்து குணமடைந்தவர்கள், சர்க்கரை நோயாளிகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் என சிலர் கருப்பு பூஞ்சை என்ற நோயாலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மாவட்டத்தில் நேற்று கருப்பு பூஞ்சைக்கு மேலும் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 4 பேர் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர். மாவட்டத்தில் இதுவரை கருப்பு பூஞ்சை நோய்க்கு 335 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story