சேலத்தில் இடியுடன் பலத்த மழை
சேலத்தில் இடியுடன் பலத்த மழை பெய்தது
சேலம்
வெப்பச்சலனம் காரணமாக சேலம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. இந்த நிலையில் சேலத்தில் நேற்று காலை 10 மணியில் இருந்து வெயில் அடித்தது. அதன் பின்னர் மாலை 3 மணி அளவில் மேகமூட்டம் காணப்பட்டது. சிறிது நேரத்தில் லேசாக மழை தூறல் விழுந்தது.
அதன் பிறகு இரவு 8 மணி அளவில் குளிர் காற்று வீசத்தொடங்கியது. தொடர்ந்து இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யத்தொடங்கியது. இரவு 10 மணி வரை இந்த மழை நீடித்தது. தொடர்ந்து நள்ளிரவு வரை அவ்வப்போது விட்டு விட்டு மழைத்தூறல் விழுந்து கொண்டே இருந்தது. இந்த மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. மேலும் மழையால் இரவு முழுவதும் குளிர் காற்று வீசியது.
Related Tags :
Next Story