யோகா பயிற்சி மையத்தில் திருட முயன்றவர் கைது


யோகா பயிற்சி மையத்தில் திருட முயன்றவர் கைது
x
தினத்தந்தி 2 July 2021 1:31 AM IST (Updated: 2 July 2021 1:31 AM IST)
t-max-icont-min-icon

திருவேங்கடத்தில் யோகா பயிற்சி மையத்தில் திருட முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.

திருவேங்கடம்:
திருவேங்கடம் அருகே சங்குபட்டியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 48). இவர் நேற்று மதியம் திருவேங்கடம் பஜாரில் உள்ள யோகா பயிற்சி மையத்தின் கதவை உடைத்து திருட முயன்றார். அப்போது அங்கு வந்த யோகா பயிற்சி மைய உரிமையாளர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மாரிமுத்துவை கையும் களவுமாக பிடித்து திருவேங்கடம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்தனர்.

Next Story