மடத்துக்குளம் பகுதியில் 56 வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தை மாவட்ட கலெக்டர் வினீத் திடீர் ஆய்வு


மடத்துக்குளம் பகுதியில் 56 வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தை மாவட்ட கலெக்டர் வினீத் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 2 July 2021 1:33 AM IST (Updated: 2 July 2021 1:33 AM IST)
t-max-icont-min-icon

மடத்துக்குளம் பகுதியில் 56 வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தை மாவட்ட கலெக்டர் வினீத் திடீர் ஆய்வு

போடிப்பட்டி
மடத்துக்குளம் பகுதியில் 56 வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தை மாவட்ட கலெக்டர் வினீத் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
வீடுகளுக்கு குடிநீர்
மடத்துக்குளம் ஒன்றியம் மெட்ராத்தி ஊராட்சி தாசர்பட்டியில் ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் ரூ.4 லட்சத்து 83 ஆயிரம் மதிப்பில் 56 வீடுகளுக்கு தனித்தனியாக குடிநீர் வழங்கும் திட்டத்தை ஆய்வு செய்தார்.
மேலும் ரூ.3 லட்சத்து 84 ஆயிரம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறு, குடிநீர்த்திட்டப்பணிகள் நடைபெற்றுள்ளன. 
அண்ணாநகர் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தில் ரூ.9லட்சத்து 70 ஆயிரத்தில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, பணத்தம்பட்டியில் பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் மூலம் ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்தில் கட்டப்படும் பயனாளியின் வீடு என மொத்தம் ரூ.20 லட்சத்து 47 ஆயிரத்தில் மேற்கொள்ளப்படும் பணிகளை கலெக்டர் வினீத் ஆய்வு செய்தார்.
தாலுகா அலுவலகம்
முன்னதாக மடத்துக்குளம் தாலுகா அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது மெட்ராத்தி ஊராட்சி மன்றத்தலைவர் தங்கராஜ், உடுமலை ஆர்.டி.ஓ. கீதா, மடத்துக்குளம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) சாதிக் பாட்ஷா, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சதிஷ், சாந்தி, உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story