மனைவி தாய் வீட்டுக்கு சென்றதால் டிரைவர் தற்கொலை


மனைவி தாய் வீட்டுக்கு சென்றதால்  டிரைவர் தற்கொலை
x
தினத்தந்தி 2 July 2021 1:34 AM IST (Updated: 2 July 2021 1:34 AM IST)
t-max-icont-min-icon

தாழக்குடி அருகே மனைவி தாய் வீட்டுக்கு சென்றதால் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆரல்வாய்மொழி:
தாழக்குடி அருகே மனைவி தாய் வீட்டுக்கு சென்றதால் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
டிரைவர்
தாழக்குடி அருகே கனகமூலம் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சுயம்புலிங்கம் (வயது31), டெம்போ டிரைவர். இவரது மனைவி லிங்கேஸ்வரி (22). இவர்களுக்கு 4 வயதிலும், 2 வயதிலும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சுயம்புலிங்கத்திற்கு மது பழக்கம் உண்டு எனத்தெரிகிறது. இதனால், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
நேற்று முன்தினம் இரவு சுயம்புலிங்கம் அதிக மது போதையில் வீட்டுக்கு சென்றுள்ளார். அவரை மனைவி கண்டித்தார். இதனால் அவர்கள் இடைேய மீண்டும் தகராறு ஏற்பட்டது. உடனே லிங்கேஸ்வரி குழந்தைகளை அழைத்து கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றார். இதனால், சுயம்புலிங்கம் மனமுடைந்த நிலையில் தூங்க சென்றார். 
தூக்குப்போட்டு தற்கொலை
நேற்று காலையில் வெகுநேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவருடைய தம்பி சதீஷ் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது சுயம்புலிங்கம் தூக்கு போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். 
இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிச்செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story