வெள்ளகோவிலில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு கொண்டு சென்ற முதியவர் கைது
வெள்ளகோவிலில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு கொண்டு சென்ற முதியவர் கைது
வெள்ளகோவில்,
வெள்ளகோவிலில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மசாலா புகையிலை பொருட்களை விற்பனைக்கு கொண்டு சென்ற முதியவரை போலீசார் கைது செய்தனர்.
கண்காணிப்பு
வெள்ளகோவில்-முத்தூர் ரோட்டில் காங்கேயம் போலீஸ் துணை சூப்பிரண்டு குமரேசன் மற்றும் வெள்ளகோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர், ஏட்டு மணிமுத்து, சதீஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிறப்பு படையினர் முத்துக்குமார், இளம்வழுதி ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த பகுதியில் உள்ள ஒருவர் கடையில் இருந்து மொபட்டிற்கு சில பொருட்களை மூட்டை கட்டி ஏற்றினார். அதை கண்டதும் போலீசார் விரைந்து சென்று அந்த மூட்டையை பிரித்து பார்த்தனர். அப்போது அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட விஷத்தன்மையுள்ள நான்கு வகையான மசாலா புகையிலை பொருட்கள் இருந்தது. அவற்றின் மொத்தஎடை 40 கிலோ.
கைது
விசாரணையில் அவருடைய பெயர் செல்வம் (வயது 66) என்றும், கடைகளுக்கு சப்ளை செய்வதற்காக தனது மொபட்டில் எடுத்து வைத்துக் கொண்டிருந்த போது போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கினார். இதையடுத்து போலீசார் செல்வத்தை கைது செய்தனர். மேலும் புகையிலைபொருட்கள் மற்றும் மொபட்டை பறிமுதல்செய்தனர். பின்னர் செல்வத்தை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
வெள்ளகோவில் பகுதியில் கடந்த வாரத்தில் விஷத்தன்மையுள்ள 25 மூட்டை மசாலா புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 2 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத் தக்கது.
Related Tags :
Next Story